×

ஊழல் மற்றும் பொருளாதார குற்ற தடுப்பு சட்டங்களை கடுமையாக்க சட்ட திருத்தம் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் நிபந்தனை: பதிவாளரிடம் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு

சென்னை: ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்கள் தடுப்புச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் திருத்தம் செய்யக் கோரி பொதுநல வழக்கை தொடர்ந்தவர் தனது உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டில் ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்கும் வகையில் உள்ள சட்டங்களை கடுமையாக்கும் வகைவகையில் திருத்தம் செய்யுமாறு மத்திய சட்ட ஆணையம், மாநில சட்ட ஆணையத்துக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த சட்டங்களில் என்ன திருத்தம் செய்ய வேண்டும்? நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டு வர விரும்புகிறீர்களா? தற்போதைய சட்டம் திறமையானதல்ல என எப்படி சொல்கிறீர்கள்? என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து, இந்த வழக்கு பொது நலனுடன் தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை. விளம்பர நல வழக்காகவே தெரிகிறது என்று கூறிய நீதிபதிகள் வழக்கு தொடர்ந்த மனுதாரர், தனது உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் ஒரு லட்சம் ரூபாயை இரு வாரங்களில் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post ஊழல் மற்றும் பொருளாதார குற்ற தடுப்பு சட்டங்களை கடுமையாக்க சட்ட திருத்தம் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட் நிபந்தனை: பதிவாளரிடம் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…