×

டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதிப்பதா? டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ2.9 கோடி அபராதம்

வாஷிங்டன்: பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர், தற்போது எக்ஸ் என பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு குற்ற வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப் பற்றிய டுவிட்டர் பதிவுகளை வழங்க அந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் டுவிட்டர் நிறுவனம், நீதிமன்றம் கேட்ட தகவல்களை வழங்க தாமதம் செய்தது.

இந்நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் தகவல்களை தர தாமதம் செய்ததாக கூறி டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.3.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது இந்திய மதிப்பில் ரூ.2.89 கோடியாகும்.

The post டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதிப்பதா? டுவிட்டர் நிறுவனத்துக்கு ரூ2.9 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : Trump ,Twitter ,Washington ,X. ,America's ,Columbia ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்