×

இந்தியா கூட்டணி என எதிர்கட்சிகள் அணிக்கு பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: இந்தியா கூட்டணி என எதிர்கட்சிகள் அணிக்கு பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி செய்துள்ளது. விளம்பரத்துக்காக பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.காங், திமுக, திரிணாமுல் காங் உள்ளிட்ட 26 காட்சிகள் கொண்ட கூட்டணிக்கு இந்திய தேசிய உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய தேசிய வளர்ச்சிக்கான கூட்டணி என்பதன் சுருக்கமே (INDIA) இந்தியா என அழைக்கபடுகிறது. இந்தியா என்ற பெயரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி என எதிர்கட்சிகள் அணிக்கு பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி செய்துள்ளனர்.

வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில் கூடியுள்ள 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கு ஏற்கெனவே இருந்த யுபிஏ (UPA) ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ என்ற பெயருக்குப் பதிலாக புதிய பெயர்களை பரிந்துரைக்க இரவு விருந்தில் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடந்த 4 புதிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கம்: I – Indian, N – National, D – Democratic, I – Inclusive, A – Alliance. அதாவது, இந்திய தேசிய ஜனநாயக உள்ளடங்கிய கூட்டணி ஆகும்.

இந்நிலையில், கிரீஷ் பரத்வாஜ் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நாட்டின் பெயரை தங்கள் கூட்டணிக்கு வைத்து, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். எனவே, ‘இந்தியா’ என்ற பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என, அந்த மனுவில் அவர் கோரியிருந்தார். மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், ‘எதிர்தரப்பினர் பதிலை பெறாமல் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது’ என, தெரிவித்தது.

இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கூட்டணியில் இடம் பெற்றுள்ள 26 அரசியல் கட்சிகள் மற்றும் ஒன்றிய அரசு, தேர்தல் கமிஷனுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டது. கிரிஷ் பரத்வாஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது அரசியல் லாப நோக்கங்களுக்காகவும், அப்பாவி மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்திற்காகவும், “இந்தியா” என்ற பெயரை கூட்டணிக்கு வைத்து எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது அரசியல் வன்முறைக்கு இட்டுச் செல்லும் என்றும், இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இந்நிலையில் பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீதிபதி இந்தியா கூட்டணி என எதிர்கட்சிகள் அணிக்கு பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி செய்துள்ளார்.

The post இந்தியா கூட்டணி என எதிர்கட்சிகள் அணிக்கு பெயர் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த பொதுநல மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Supreme Court ,Delhi ,PIL ,Dinakaran ,
× RELATED ராகுலை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி