×

தன்யா ரவிச்சந்திரன் ஃபிட்னெஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

“சிறுவயது முதலே நடிப்பின் மீதிருந்த தீராத காதலால் திரைத்துறைக்குதான் வரவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். தாத்தா ரவிச்சந்திரன் பெரிய நடிகராக இருந்ததால் என் கனவுக்கு வீட்டில் பெரிய எதிர்ப்பு இருக்காது என்று நினைத்தேன். ஆனால், கல்லூரி படிப்பு முடித்தால்தான் நடிக்க வேண்டும் என்று வீட்டில் கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள். இதனால், பி.காம் முடித்தேன். பின்னர், மாஸ்டர்ஸ் முடி பார்க்கலாம் என்றார்கள். பின்னர், மாஸ்டர்ஸ் படித்தேன். அப்போது, குறும்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வர, வீட்டில் சண்டைப் போட்டு அனுமதி வாங்கி அதில் நடித்தேன். அதைத் தொடர்ந்து பல குறும்படங்களில் நடித்து வந்தேன். இந்நிலையில், பலே வெள்ளையத்தேவா என்ற படம் மூலம் பெரியதிரை வாய்ப்பு வந்தது.

அதையடுத்து பிருந்தாவனம் என்ற படத்தில் நடித்தேன். பின்பு 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் இணைந்து கருப்பன் படத்தில் நடித்தேன். இந்த படம் தான் என் கேரியருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவாகிய நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்தேன். அதைத்தொடர்ந்து தற்போது, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறேன்’’ என்று கூறும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் தனது ஃபிட்னெஸ் ரகசியங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

உடற்பயிற்சி

தற்போது நடிகையாகிவிட்டேன் என்பதற்காக ஃபிட்னெஸில் கவனம் செலுத்த தொடங்கவில்லை. எனக்கு எப்போதுமே ஃபிட்டாக இருப்பது பிடிக்கும். அதனால் சிறுவயது முதலே, உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கம் உண்டு. மேலும், பள்ளி பருவத்தில் ஸ்போர்ட்ஸில் அதிக கவனம் செலுத்துவேன். அதனால், தினசரி ஸ்போர்ட்ஸ் பிராக்டீஸுக்கு செல்வதே எனக்கு ஒரு உடற்பயிற்சியாக இருக்கும்.

மேலும், அம்மா லாவண்யா கிளாசிக்கல் டான்ஸர் என்பதால், சிறுவயது முதலே டான்ஸ் பயிற்சியும் உண்டு. இவையெல்லாம் திரைத்துறைக்கு வரும் முன்பு செய்து வந்த உடற்பயிற்சிகள். திரைத்துறைக்கு வந்தபிறகு, நடைப்பயிற்சி, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், ஸ்டேமினாவை அதிகரிக்கும் பைலேட்ஸ் பயிற்சிகள், புஷ்- அப், புல் – அப், க்ரஞ்சஸ் என பல ஒர்க்கவுட்ஸ் உண்டு. இதுதவிர, தினசரி யோகாவுக்கும் நேரம் ஒதுக்குவேன்.

டயட்

நடிகையாக இருக்கிறேன். அதனால், இதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று பெரிய டயட் எல்லாம் ஃபாலோ பண்ணுவது கிடையாது. நான் ஒரு ஃபுட்டி என்று சொல்லலாம். நல்ல உணவுகளை தேடி தேடி உண்ணும் பழக்கம் உடையவள். என்ன ஆசைபடுறோமோ, என்னென்ன பிடிக்குமோ அதை சாப்பிட்டுவிட வேண்டும். பின்னர், கொஞ்சம் ஒர்க்கவுட்ஸ் சேர்த்து செய்து கொள்வேன் அவ்வளவுதான்.

அதேசமயம், அசைவம் சாப்பிட மாட்டேன். ப்யூர் வெஜிடேரியன். எனது தினசரி உணவுகளில் பழச்சாறு மற்றும் வெஜ் சாண்ட்விச் அதிகம் இருக்கும். மதிய உணவில், காய்கறிகள் நிறையவே எடுத்துக் கொள்வேன். சாலட், தயிர் நிச்சயம் இருக்கும். இரவில் பழங்கள், சப்பாத்தி, பால் எடுத்துக் கொள்வேன். இவ்வளவுதான் என்னுடைய தினசரி உணவுமுறைகளாகும். ஸ்நாக்ஸ் வகைகளில், பானிபூரி, பேல்பூரி, தஹி பூரி என சாட் அயிட்டங்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இனிப்பு வகைகளில் ரசகுல்லா ரொம்ப பிடிக்கும். இதுதவிர, சாக்லேட்ஸ், ஐஸ்க்ரீம் எப்போதுமே ஃபேவரேட்.

பியூட்டி

உண்மை சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய பியூட்டி சீக்ரெட்ஸ் என்று எதுவுமில்லை. என்னுடைய ஜீனிலிருந்து ஹெல்த்தியான ஸ்கின் வந்துள்ளதாக நினைக்கிறேன். அம்மா, அப்பா இருவருக்குமே நல்ல ஸ்கின் டோன் உண்டு. அதுதான் எனக்கும் வந்திருப்பதாக நினைக்கிறேன். மற்றபடி மேக்கப் கிட் என்றால், எனது கைப்பையில் பீச் கலர் லிப்ஸ்டிக், ஐ லைனர், மாய்ச்சுரைசிங் க்ரீம் இவைகள்தான் எப்போதும் வைத்திருப்பேன்.

ஃபேஷன் முழுக்க முழுக்க சினிமாவையே சுற்றி சுற்றி வந்ததால் நடிக்க வந்து விட்டேன். இருந்தாலும், தாத்தாவின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் இருந்தது. அது கருப்பன் படத்தின் மூலம் நிறைவேறியது. எனக்கு இவ்வளவு தூரம் வரவேற்பு கொடுத்து, என்னை நடிகையாக ஏற்றுக் கொண்டு அன்பு மழை பொழியும் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

The post தன்யா ரவிச்சந்திரன் ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.

Tags : Tanya Ravichandran Fitness ,Dr. ,Kungumum ,
× RELATED திருநீற்றுப் பச்சிலையில் மருத்துவ குணங்கள்!