×

விண்வெளிக்கு வணிக நோக்கிலான சுற்றுலாப் பயணம்: 3 பயணிகளை அனுப்பியது வெர்ஜின் கேலக்டிக் நிறுவனம்

அமெரிக்கா: விண்வெளி சுற்று பயண நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் வணிக நோக்கிலான தனது 2வது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கேலக்டிக் 2 என்ற சுற்றுலா விண்வெளி வாகனம் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஸ்பேஸ் போர்ட் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் 3 பேருடன் பயணித்தனர். பிரிட்டிஷ் முன்னாள் ஒலிம்பியனும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவருமான 80 வயது ஜான் குட்வின், கெரிபியன் நாட்டை சேர்ந்த தாய் கெய்ஷா ஷாஹாஃப் , மகள் ஆன்டிகுவா ஆகியோர் விண்வெளி பயணம் செய்தனர்.

அவர்களுடன் இரண்டு விமானிகள் மற்றும் விண்வெளி வீரரும் பயணத்தில் இணைந்தனர். சுமார் 88கிலோ மீட்டர் உயரம் பயணித்த கேலக்டிக் 2 களம் விண்கலத்திற்குள் நுழைந்ததும் பயணிகள் அந்தரத்தில் மிதக்கும் அனுபவத்தை பெற்று மகிழ்ந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு கேலக்டிக் 2 சுற்றுலா விண்வெளி வாகனம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த 90 நிமிட விண்வெளி பயணம் மறக்கமுடியாத அனுபங்களை தந்துள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி பயணத்துக்காக விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் நபர் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி கட்டணமாக நிர்ணயித்திருக்கிறது. இந்நிறுவனத்தின் 3வது வணிக விண்வெளி பயணம் வரும் செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.

The post விண்வெளிக்கு வணிக நோக்கிலான சுற்றுலாப் பயணம்: 3 பயணிகளை அனுப்பியது வெர்ஜின் கேலக்டிக் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Virgin Galactic ,USA ,Virgin ,Galactic ,Dinakaran ,
× RELATED கன்னி