×

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்ற 6 பேர் கோரா உயிரிழப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்ற 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதி வேகமாக வந்த லாரி மோதியதில் 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் தப்பி ஓடினர்.

சென்னை அருகே பொத்தேரி பகுதியில் மிகப்பெரிய லாரி ஒன்று இருசக்கர வாகனம் மோதி மிகப்பெரிய கோரவிபத்தானது தற்போது ஏற்பட்டுள்ளது. பொத்தேரி பகுதியில் ரயில்வே கேட் பகுதியில் அருகே இருக்கக்கூடிய திருச்சியில் இருந்து சென்னை செல்லக்கூடிய ஜி.எஸ்.டி. சாலை கடந்து 4 இருசக்கர வாகனத்தில் வந்த மக்கள் அதிவேகமாக சாலையை கடக்க முயன்ற போது டிப்பர் லாரி மோதி விபத்து நிகழ்ந்திருக்கிறது.

இரண்டு தேசிய நெடுஞ்சாலையில் இருக்கக்கூடிய சிக்னல் மீது மோதி மிகப்பெரிய விபத்துக்குள்ளானது 4 இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே தற்போது உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மறைமலை நகர் போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தற்போது உயிரிழந்தவர்களுடன் மீட்க்கும் பணியானது தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது.

இதுமட்டுமின்றி மறைமலைநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தற்போது விரைந்து இந்த பகுதியில் வரவிருக்கின்றனர். விபத்து காரணமாக சென்னையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 30 நிமிடத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் விபத்து நடந்த பகுதியில் காயமடைந்த இரண்டு பேர் மட்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் பொத்தேரியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் உடைய 6 உடலை மீட்கும் பணியானது தொடர்ச்சியாக நடைபெற்றது.

இருசக்கர வாகனத்தில் வந்த இந்த 8 பேரில் இந்த 6 பேர் முதற்கட்டமாக உயிரிழந்துள்ளனர். 6 பேரின் உடல்களை பார்த்தவரை டிப்பர் லாரி அடியில் சிக்கி கொண்டதன் காரணமாக அவர்களை மீட்கும் பணியானது தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய பொத்தேரி பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. ஒரே விபத்தில் சம்பவ இடத்தில 6 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சாலையை கடக்க முயன்ற 6 பேர் கோரா உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kora ,Chengalpatu district Boteri ,Chennai ,Chengalputtu district Patteri ,Chengalpaddu District Patteri ,
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி...