×

121 ஊராட்சிகளில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை

 

பெரம்பலூர், ஆக. 11: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும் சுதந்திர தின சிறப்பு கிராமசபைக் கூட்டம் 15ம் தேதி நடைபெறுகிறது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் 76-வது சுதந்திர தினத் தன்று (15ம் தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம், அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. ஊராட்சிமன்ற தலைவர்கள் கிராமசபைக் கூட்டத்திற்கு தலைமை ஏற்க வேண்டும்.

ஊராட்சி துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினா்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும். இணையவழி மனைப் பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்.

தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். மரக்கன்றுகள் நடவேண்டும். கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதைக் கண் காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.கிராம சபைக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், வாக்காளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

The post 121 ஊராட்சிகளில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Gram Sabha ,Perambalur ,Independence Day Special Gram Sabha Meeting ,Perambalur District ,Dinakaran ,
× RELATED சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது