×

பைக்கில் தடுமாறி விழுந்து இளைஞர் படுகாயம்

 

குளித்தலை, ஆக. 11: குளித்தலை அருகே, பைக்கில் தடுமாறி விழுந்ததில் இளைஞர் படுகாயமடைந்தார். குளித்தலை அருகே குப்பாச்சிப்பட்டி காலனியை சேர்ந்தவர் சேகர் மகன் தினேஷ் (24). இவர் கடந்த 6ம் தேதி அன்று தனது பைக்கில் வயலூர் பகுதியில் இருந்து இரும்பூதிப்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் நிலை தடுமாறி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் தினேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தினேஷின் தந்தை சேகர் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக்கில் தடுமாறி விழுந்து இளைஞர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Kuppachipatti Colony ,Dinakaran ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...