×

பெண் கைதிகளுக்கு ஒரு மாத அழகு கலை பயிற்சி நிறைவு தாட்கோ இயக்குனர் பங்கேற்பு வேலூர் பெண்கள் தனிச்சிறையில்

வேலூர், ஆக.11: வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பெண் கைதிகளுக்கு ஒரு மாத அழகு கலை பயிற்சி நிறைவு விழாவில் தாட்கோ இயக்குனர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார். தமிழக சிறைத்துறை கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆண் கைதிகளுக்காக பெட்ரோல் பங்க் சென்னை புழலில் முதல் முறையாக திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத் துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்க்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர். நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பெட்ரோல் பங்க்குகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பெண் கைதிகளுக்கு என்று தனியாக பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. கைதிகளுக்கு தியானம், யோகா, இசை, நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பெண் கைதிகளுக்கு ஒரு மாத அழகுக்கலை படிப்பு பயிற்சி கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறைத்துறை சரக டிஐஜி ராஜலட்சமி தலைமை தாங்கினார். சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தாட்கோ இயக்குனர் கந்தசாமி, கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, சிறைவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் மற்றும் பயிற்சிக்கு பிறகு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பெண் சிறைவாசிகளுக்கு ஒருமாதகால அழகுகலைப் பயிற்சியினை தாட்கோ நிறுவனமும், சென்னையை சேர்ந்த விஜயகீதம் அறக்கட்டளை மூலமாகவும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 28 பென் தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்றனர். விடுதலைக்கு பிறகு வேலை வாயப்ப்பிற்கு உத்திரவாதம் ஏற்படுத்தும் வகையில், பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

The post பெண் கைதிகளுக்கு ஒரு மாத அழகு கலை பயிற்சி நிறைவு தாட்கோ இயக்குனர் பங்கேற்பு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் appeared first on Dinakaran.

Tags : TADCO ,Vellore Women's Prison ,Vellore ,Thadco ,
× RELATED தாட்கோ திட்டத்தின் கீழ் மானியத்துடன்...