×

சிறுமலை அடிவாரத்தில் காட்டுமாடு மர்மச்சாவு

நிலக்கோட்டை, ஆக. 11: கொடைரோட்டை அடுத்த பள்ளபட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள புலமாசி கண்மாயில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மக்காச்சோள தோட்டத்தில் நேற்று சுமார் நான்கு வயது மதிக்க காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகுமார், அப்துல் ரகுமான், ராஜேஷ்கண்ணன் மற்றும் வனவர்கள் புகழ்கண்ணன் ,சரவணன் உள்ளிட்டோர் சென்றனர். அவர்கள் இறந்து கிடந்த காட்டு மாட்டினை மீட்டு கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர். மேலும் காட்டு மாடு இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமலை அடிவாரத்தில் காட்டுமாடு மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Sirumalai ,Nilakottai ,Pulamasi Kanmai ,Pallapatti ,Kodairot ,
× RELATED தொடர்மழை காரணமாக பூத்துக் குலுங்கும்...