×

காலி மனை இடங்களை பதிவதில் பதிவு துறையில் 16ம் தேதி முதல் புதிய நடைமுறை: துறை தலைவர் தகவல்

சென்னை: பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட அறிக்கை: காலிமனை என குறிப்பிட்டு பதிவுக்கு வரும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரஸ்தாப இடத்தினை பதிவுக்கு முன்பாக புகைப்படம் எடுக்க வேண்டும். மேலும், இப்புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸ் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு எடுக்கப்படும் புகைப்படம் ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறை வரும் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. காலிமனை என பதியப்படும் ஆவணங்கள் தொடர்பாக இந்த அறிவுரையை பின்பற்றாத சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காலி மனை இடங்களை பதிவதில் பதிவு துறையில் 16ம் தேதி முதல் புதிய நடைமுறை: துறை தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinesh Ponraj Oliver ,Registry ,Department ,Kaliman ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...