×

என்.எல்.சி விவகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை: வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: பூவுலகின் நண்பர்கள் குழு கடந்த 8ம் தேதி நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தொடர்பான ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ என்கிற ஆய்வறிக்கை வெளியிட்டது. அந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் குழு அமைப்பின் சுந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் சாய் அமர்வு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக விசாரித்துள்ளது. விசாரணையில், என்எல்சி நிர்வாகம், ஒன்றிய, மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியங்கள், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட தொடர்புடைய அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

The post என்.எல்.சி விவகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை: வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : National Green Tribunal ,NLC ,CHENNAI ,Friends of the Earth ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...