- வேடிக்கையான புள்ளி
- இந்தியா
- சிந்து
- சத்விக் சிராஜ்
- சிராக் ஷெட்டி
- உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்
- டென்மார்க்
- தின மலர்
* டென்மார்க்கில் ஆக.21ம் தேதி தொடங்க உள்ள உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து, சாத்விக் சாய்ராஜ்/சிராக் ஷெட்டி நேரடியாக 2வது சுற்றில் களம் காண உள்ளனர்.
*‘இந்தியாவின் ஒருநாள் அணியில் 4வது இடத்தில் யுவராஜிக்கு பிறகு ஸ்ரேயாஸ் பொருத்தமாக இருந்தார். அவர் காயத்தால் அவதிப்படுவதால் ஒரு புதிய பையன் அந்த 4வது இடத்தில் களமிறக்கப்படுவார்’ என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
* கவுகாத்தியில் நேற்று நடந்த துரந்த் கோப்பை இ பிரிவு லீக் ஆட்டத்தின் சென்னையின் எப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்சி அணியை வீழ்த்தியது.
* இந்தியாவின் யு-17 மகளிர், ஆடவர் அணிகளின் பயிற்சியாளர்களாக முன்னாள் கேப்டன்கள் ராணி ராம்பால், சர்தார் சிங் ஆகியோர் 3ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
* சென்னை மகளிர் கிறிஸ்வதுக் கல்லூரியில் நடந்த மகளிர் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் எம்ஓபி வைணவ மகளிர் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
* தேசிய அளவிலான யு-18 சிறுவர் சிறுமிகளுக்கான 30வது டிவிஎஸ்-எம்சிசி டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை முதல் ஆக.19ம் தேதி வரை நடைபெறும்.
n புச்சி பாபு கிரிக்கெட் போட்டி ஆக.15ம் தேதி முதல் செப்.5ம் தேதி வரை நடைபெற உள்ளது. ‘இந்த தொடரை சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. ஆட்டங்கள் சேலம், கோவை, திண்டுக்கல், நெல்லை நகரங்களில் நடக்கும்’ என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் நேற்று தெரிவித்தார்.
The post சில்லிபாயிண்ட் appeared first on Dinakaran.