×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன மக்களின் நலனுக்காக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்..!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் தலைமையிலான குழுவானது, மாநிலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அரசு தலைமைச் செயலாளர், வெ.இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை இயக்குநர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின்  கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர்,இ.ஆ.ப., தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் இயக்குநர்  சுனில் குமார் பாபு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் 03.11.2021 அன்று காலை 10.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் ஆய்வினை மேற்கொண்டது. இவ்வாய்வுக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் நலனுக்காக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் முறைகள் குறித்து துணைத் தலைவர் தலைமையிலான குழுவிற்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நல ஆணையர், மேலாண்மை இயக்குநர், தாட்கோ மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்….

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் இன மக்களின் நலனுக்காக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்..! appeared first on Dinakaran.

Tags : Adi Dravidian ,Chennai ,Vice Chairman ,National ,Commission ,for the Welfare of the Underprivileged ,Arun Halder ,Chennai Secretariat ,
× RELATED வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை