×

சீனா, வியாட்நாமிலிருந்து 95% மடிக்கணினிகள் இறக்குமதி: உள்நாட்டிலேயே ஹார்ட் டிஸ்க், ரேம் உற்பத்தி செய்ய கோரிக்கை

கோவை :நடப்பாண்டில் ரூ.43,900 கோடி அளவிற்கு மடிக்கணினி வர்த்தகம் உயர்ந்துள்ளதால் உள்நாட்டிலேயே மடிக்கணினி மற்றும் உதிரி பாகங்களை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன் 2019ல் மடிக்கணினிகளை ஐடி அலுவலகங்கள் ஐடி ஊழியர்கள் கல்லூரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்திவந்தனர். ஆனால் கொரோன காலத்தில் அலுவலக பணியாளர்கள் ஐடி துறையினர், பள்ளி, கல்லூரி, மாணவர்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர்.

அப்போது வீட்டிலிருந்த வேலை மற்றும் பள்ளி கல்லூரி பாடங்களின் இணைய வழி வகுப்புகள் அதிகரித்ததால் மடிக்கணினிகளின் பயன்பாடும் உயர்ந்தது. இதனால் கடந்த காலங்களில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்திய மதிப்பில் ரூ 12,400 கோடியாக இருந்த மடிக்கணினி இறக்குமதி நடப்பாண்டில் இந்திய மதிப்பில் 43,900 கோடியாக உயந்துள்ளது. குறிப்பாக வியட்நாம், சீனாவில் இருந்து நடப்பாண்டு 95% மட்டுமே மடிக்கணினிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் உள்நாட்டில் மடிக்கணினி மற்றும் அதன் உதிரி பாகங்களான மதர்போர்டு, ஹார்டிஸ்க், ரேம் உள்ளிட்டவற்றின் உற்பத்தி செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இறக்குமதி செய்யப்படுவதால் போக்குவரத்து செலவினங்களுடன் மடிக்கணினிகளின் விலை அதிகமாகவே விற்பனை செய்யப்படும் என அந்த துறையில் ஈடுபட்டுவரும் வணிகர்களும், சிறு தொழில் முனைவோரும் கூறுகின்றனர். எனவே உள்நாட்டில் தயாரித்தால் விலை மலிவாக கிடைப்பதுடன் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

The post சீனா, வியாட்நாமிலிருந்து 95% மடிக்கணினிகள் இறக்குமதி: உள்நாட்டிலேயே ஹார்ட் டிஸ்க், ரேம் உற்பத்தி செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : China, Vietnam ,Gokai ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு