×

பிரதமர் மோடியின் மவுனத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தோம்: மக்களவையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச்சு

டெல்லி: பிரதமர் மோடியின் மவுனத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தோம் என்று திர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் நடைபெற்று வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதுகுறித்து பேசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மணிப்பூர் வன்முறை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது.

இந்திய நாட்டு மக்கள் நலன் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை; பிரதமர் வர வேண்டும் என்றே கூறினோம் என்று குறிப்பிட்டார். மேலும் பிரிட்டிஷ் ஜனநாயகபடி மக்களவை நடப்பதாக ஆதிர் ரஞ்சன் சவுத்திரியின் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடியை நீரவ் மோடியுடன் ஒப்பிட்டு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி பேசியதற்கு பாஜக ஆட்சேபம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தது.

மக்களவையில் பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பேசவிடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவரின் பேச்சு அவரது பதவிக்கு அழகல்ல என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டார். மக்களவையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ள நிலையில் கடும் அமளி நிலவி வருகிறது.

The post பிரதமர் மோடியின் மவுனத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தோம்: மக்களவையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Aadir Ranjan Choudri ,Delhi ,President ,Aadir Ranjan Choudhri ,Aadir Ranjan ,Dinakaran ,
× RELATED பிரதமர் பதவியின் மாண்பை மோடி...