×

5 ஆண்டுகளாகிவிட்டது, கடனும் வந்து சேரவில்லை; கட்டடமும் கட்டப்படவில்லை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சு.வெங்கடேசன் கண்டனம்

டெல்லி: 5 ஆண்டுகளாகிவிட்டது, கடனும் வந்து சேரவில்லை; கட்டடமும் கட்டப்படவில்லை என்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமநாதபுரத்தில் தற்காலிகமாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படுவதாகவும் அதில் 99 மாணவர்கள் படித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட நிதி அதிகரிப்பால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை; கூடுதல் கடனும் இல்லை. மதுரையில் ஜெய்கா கடன் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் கட்டப்படும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதமாகிறது என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; “மதுரை எய்ம்ஸ் சிறப்பாக அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜெய்காவிடம் கடன் வாங்கிக் கட்டுகிறோம்”. என்றார் நிதியமைச்சர். “எப்போ? எப்போ?” என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். 5 ஆண்டுகளாகிவிட்டது, கடனும் வந்து சேரவில்லை. கட்டிடமும் கட்டப்படவில்லை. கண்டித்து வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு தெரிவித்தார்.

The post 5 ஆண்டுகளாகிவிட்டது, கடனும் வந்து சேரவில்லை; கட்டடமும் கட்டப்படவில்லை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சு.வெங்கடேசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS Hospital ,Venkatesan ,Delhi ,Madurai M. GP ,Aims Hospital ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை