×

அக்னிவீர் திட்டத்தில் விமானப்படைக்கு 3500 பேர் தேர்வு :பிளஸ் 2 டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பணி: AGNIVEER (Agniveer Vayu Intake 01/2024):
சம்பளம்: முதல் வருடம்- ரூ.30 ஆயிரம், 2ம் வருடம்- ரூ.33 ஆயிரம், 3ம் வருடம்- ரூ.36,500, 4ம் வருடம்- ரூ.40 ஆயிரம்.
வயது: 17 முதல் 21க்குள். அதாவது 27.6.2003க்கும் 27.12.2006க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். திருமணமாகாத ஆண்கள்/பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி: கணித பாடப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேசன் டெக்னாலஜி ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உடற்தகுதி: உயரம்: ஆண்கள்- 152.5 செ.மீ., பெண்கள் 152 செ.மீ.,

மார்பளவு: ஆண்கள்- சாதாரண நிலையில் 77 செ.மீ அகலமும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.இந்திய விமானப் படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் உடற்திறன் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர். உடற்திறன் தேர்வில் ஆண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் புஷ் அப்ஸ், சிட் அப்ஸ், ஸ்குவாட் பயிற்சிகளை செய்ய வேண்டும். இவற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

கட்டணம்: ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.8.2023.

The post அக்னிவீர் திட்டத்தில் விமானப்படைக்கு 3500 பேர் தேர்வு :பிளஸ் 2 டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : AGNIVEER ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு