×

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: தொடர்மழையால் 50 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கடலூர்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மூன்றாம் நாளாக தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியதால் 50 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் தீபாவளி வியாபாரம் களையிழந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த நில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இலங்கை பகுதியில் நிலை ெகாண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடரந்து மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. கடலூர் பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளிலும், குறிஞ்சிப்பாடி பரவனாற்றிலும் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது. பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து பூவாணிக்குப்பம் உள்ளிட்ட கிராம சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.இதேபோல் பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள குமித்தாமேடு தரைப்பாலம் மூழ்கியதால் அவ்வழியே போக்குவரத்தை தடை செய்த போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு அக்கிராமங்களுக்கு செல்லும் மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.  மேலும் கடலூர் மாவட்டத்தில் இன்று 3ம் நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நாளை தீபாவளி, மறுநாள் விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வருகிற 8ம்தேதி (திங்கள்கிழமை) தான் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் சில நாட்களாக சூடுபிடித்திருந்த தீபாவளி விற்பனை பலத்த மழையால் மந்த நிலையை எட்டி உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நடைபாதை வியாபாரிகளும் பலத்த மழையால் வியாபாரம் முடங்கி பெரிதும் அவதிப்படுகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது. புவனகிரியில் அதிகட்சபமாக 140 மி.மீ, தொழுதூர் 122, சேத்தியாத்தோப்பு 117, காட்டுமன்னார்கோவில் 76, விருத்தாசலம் 71, சிதம்பரம் 70.2, கடலூர் 59.2, பண்ருட்டி 52.2 என மாவட்டத்தில் 1892.7 மி.மீ (19 செ.மீ) மழை பதிவாகி உள்ளது. தொடர்மழை நீடிப்பதால் கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. ெதாடர்ந்து மழை பாதிப்பு பகுதிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் தொடங்கிய மழை விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய பெய்தது. மேலும் இந்த மழையினால் விழுப்புரம் மாவட்டத்தில் 2 கூரை வீடுகள், 1 ஓட்டு வீடு இடிந்துள்ளது. விழுப்புரம் கொத்தாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் அய்யாவு மற்றும் கண்டமங்கலம் பகுதியில் பிச்சைக்காரன்  கூரை வீடு முழுவதுமாக சேதமடைந்துள்ளது. அதேபோல் விழுப்புரம் எல்.ஆர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் ஓட்டு வீடும் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. விழுப்புரம் நகரப் பகுதியில் நேற்று முழுவதும் மிதமான மழை தொடர்ந்து பெய்தது. தொடர்ந்து பெய்துவரும் மழையினால் தாழ்வான பகுதிகளான விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், காந்தி சிலை, திரு.வி.க வீதி மற்றும் கீழ்ப்பெரும்பாக்கம் தரைபாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமல் உடனுக்குடன் நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புளுக்கு சூழற்சி முறையில் கடந்த 1ம் தேதி முதல் முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் மழையினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது….

The post கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: தொடர்மழையால் 50 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore, Viluppuram, Kallakkurichi district ,Cuddalore ,Cuddalore, Viluppuram, Kallakkuruchi district ,Dinakaran ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்