![]()
திருப்பதி: திருப்பதியிலிருந்து தெலுங்கானாவிற்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் அச்சமடைந்தனர். திருப்தியிலிருந்து – தெலுங்கானா மாநிலம் செகண்ட்ராபாத் நோக்கி புறப்பட்ட வந்தேபாரத் விரைவு ரயில் மனுபோலு சென்ற போது ரயிலில் புகை மூட்டம் ஏற்பட்டது.
இதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தினர். அப்போது பயணிகள் கீழே இறங்கி அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். ரயிலில் சோதனை செய்த போது மூன்றாவது பெட்டியில் உள்ள கழிவறையில் பாதி பிடிக்கப்பட்ட சிகரெட் துண்டிலிருந்து புகை வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பெட்டியில் இருந்த கேமிரா காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து இந்த சம்பவத்திற்கு காரணமான டிக்கெட் இல்லாத பயணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் ரயில் ஊழியர்கள் சிகரெட்டை அனைத்து புகையை முழுமையாக வெளியேற்றிய பின் ரயிலை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
The post திருப்பதி-தெலுங்கானாவிற்கு இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில் புகை: பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.
