×

உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி: மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 3வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து வருகிறார். அப்போது பேசிய அவர்; உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. 2022ல் உலக பொருளாதாரம் 3% மட்டுமே வளர்ச்சி கண்டது. மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடான இங்கிலாந்து மிகவும்  சவாலான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. இங்கிலாந்து வங்கிகள் தொடர்ந்து 14வது முறையாக வட்டியை உயர்த்தி உள்ளன. ஐரோப்பிய யூனியன் வங்கிகளும் தொடர்ந்து 9வது முறையாக வட்டியை உயர்த்தி உள்ளன எனவும் கூறினார்.

The post உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது: நிர்மலா சீதாராமன் உரை appeared first on Dinakaran.

Tags : Global Economic Recession ,Nirmala Sitharaman ,Delhi ,Lok Sabha ,Modi ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...