×

க்வீடோவில் நடந்த பயங்கரம்: தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஈக்வடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை

க்வீடோ: ஈகுவடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தேர்தல் பிரசாரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். தென்அமெரிக்காவின் வடமேற்கு திசையில் ஈகுவடார் என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் உள்ளார். ஈக்வடாரில் நாடாளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கு முன், வில்லவிசென்சியோ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதனால் அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் அவர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அவர் புதன்கிழமை இரவு தலைநகர் க்வீடோவில் அரசியல் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு விட்டு தனது காரில் ஏற சென்ற போது வில்லவிசென்சியோ ​​மீது சில அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் அவரை நோக்கி தலையில் சுட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்தார். இச்சம்பவத்தால், ஈக்வடார் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. 59 வயதான பத்திரிக்கையாளர் வில்லவிசென்சியோ ஆகஸ்ட் 20 அன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான 8 வேட்பாளர்களில் ஒருவர். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன.

இந்த சம்பவம் குறித்து ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாசோ கவலை தெரிவித்துள்ளார் . அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது கவலையே அவரது மனைவி மற்றும் மகள்களை எப்படி தேற்றுவது என்பது தான். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் கொலையாளிகள் தப்பமாட்டார்கள் என்று உறுதியளிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

The post க்வீடோவில் நடந்த பயங்கரம்: தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஈக்வடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Ecuador ,Quito ,Fernando Villavicencio ,South America ,Dinakaran ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...