×

வடமதுரை அருகே ஸ்டூடியோவை உடைத்து திருடியவர் கைது

வடமதுரை: வடமதுரை அருகேயுள்ள தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகனபிரியா (39). இவர் தென்னம்பட்டி நால்ரோடு அருகே போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 5ம் தேதி நள்ளிரவு இவரது ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் பணம், 3 கேமராக்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து மோகனப்பிரியா வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மோகன பிரியாவின் ஸ்டூடியோவில் திருடியது மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த சதீஸ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரை, வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

The post வடமதுரை அருகே ஸ்டூடியோவை உடைத்து திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Moganabriya ,Tendambati ,South Ambatti Four Road ,
× RELATED திமுக ஆலோசனைக் கூட்டம்