×

ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர்: கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது. ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது தமிழ் ஆன்றோர் வாக்கு ஆகும். பெரம்பலூர் நகரில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு எளம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு பால முருகன் திருக்கோயிலில் பால முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்க ப்பட்டது. இதைமுன்னிட்டு, பெரம்பலூர், துறை மங்கலம், அரணாரை, எளம்பலூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் கலந்துகொண்டு பாலமுருகனை வணங்கிச் சென்றனர்.

இதேபோல் பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுப்ரமணிய சுவாமிக்கு காவடி எடுத்தனர். ஏராளமான பெண்கள்பால் குடங்களை எடுத்துவந்த னர். பின்னர் சுப்ரமணிய சுவாமிக்கு சிறந்நு அபிஷேகம்செய்யப்பட்டு அலங்காரத்திற்கு பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் குரும்பலூர், ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, புதூர் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழி பட்டுச் சென்றனர். மேலும் அருகிலுள்ள பாளையம் அருள்மிகு சுப்ரமணியர் கோயிலில் நடந்த ஆடி கிருத்திகையை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஊர்வமாக தலையில் சுமந்துவந்தனர். சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண் டனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்புமிக்க தொண்டமாந்துறை மலைக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

The post ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Murugan ,Aadi Krittikai ,Krithikai ,Adi ,Adi Krittikai ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்