×

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா: புள்ளி பட்டியலில் முதலிடம்

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியை அபாரமாக வென்ற இந்தியா புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியது. எம்.ஆர்.கே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்திய இந்திய அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 15வது மற்றும் 23வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் அமர்க்களமாக கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

3வது குவார்ட்டரில் கிடைத்த ஒரு பி.சி வாய்ப்பில் ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தார் (36வது நிமிடம்). பாகிஸ்தான் வீரர்களை திணறடித்து முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 4வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது.  முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில் கொரியாவுடன் நேற்று மோதிய மலேசிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் அபு கமால் 22வது நிமிடத்தில் அபாரமாக ஃபீல்டு கோல் போட்டார்.

The post பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா: புள்ளி பட்டியலில் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : India ,Pakistan ,Chennai ,Asian Champions Trophy hockey tournament ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்