×

பில் தொகையை வழங்க 15% கமிஷன் கேட்கிறார் டி.கே.சிவகுமார் மீது ஆளுநரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகையை வழங்க, டி.கே.சிவகுமார் 10-15 கமிஷன் கேட்பதாக பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், நேற்று பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். அந்த புகார் மனுவில், பெங்களூரு மாநகர வளர்ச்சித்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஒப்பந்ததாரர்களுக்கான பில் தொகையை விடுவிக்க 10-15 சதவிகிதம் கமிஷன் கேட்கிறார். 2019-2023 காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான பில் தொகையை கமிஷன் இல்லாமல் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷன் கேட்டு ஒப்பந்ததாரர்களை கஷ்டப்படுத்தும் டி.கே.சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘நான் நேர்மையானவன் என்று எந்த கடவுளிடம் சென்று சத்தியம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இதுமாதிரியான மிரட்டல்களுக்கெல்லாம் நான் அசரமாட்டேன். ஒப்பந்ததாரர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எதிர்க்கட்சிகள் தனக்கு எதிராக ஒப்பந்ததாரர்களை தூண்டி விடுகிறது. ஒப்பந்ததாரர்கள் செய்த வேலைக்கான தொகை அவர்களுக்கு விடுவிக்கப்படும். பில் தொகையை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. செய்யப்படாத வேலைகளுக்கான தொகையை விடுவிக்க முடியுமா? என்று டி.கே.சிவகுமார் கேள்வி எழுப்பினார். ஒப்பந்ததாரர்கள் எடியூரப்பா மற்றும் குமாரசாமியை சந்தித்து ஆதரவு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பில் தொகையை வழங்க 15% கமிஷன் கேட்கிறார் டி.கே.சிவகுமார் மீது ஆளுநரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : D.C. K.K. ,Sivamar ,Bangalore ,Bangalore Corporation, ,D.C. K.K. Sivagamar ,Commission ,Bengaluru ,K.K. ,Sivagamar ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...