×

விலையை கட்டுப்படுத்த 50 லட்சம் டன் கோதுமை 25 லட்சம் டன் அரிசி விற்பனை: ஒன்றிய அரசு அறிவிபபு

புதுடெல்லி: விலையை கட்டுப்படுத்த, கூடுதலாக 50 லட்சம் டன் கோதுமை, 25 லட்சம் டன் அரிசியை வெளி சந்தையில் விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய உணவு துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா நேற்று கூறுகையில்,‘‘ நாட்டின் பல பகுதிகளில் சமீபத்தில் கோதுமை, அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் விலையை குறைப்பதற்கு கூடுதலாக 50 லட்சம் டன் கோதுமை,25 லட்சம் டன் அரிசியை திறந்தவெளி சந்தை விற்பனை திட்டம் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் மூலம் 15 லட்சம் டன் கோதுமை, 5 லட்சம் டன் அரிசி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அது தவிர தற்போது கோதுமை, அரிசி ஆகியவை கூடுதலாக விற்பனை செய்யப்படும். திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் மின்னணு ஏலம் 7 லட்சம் டன் கோதுமை விற்கப்பட்டுள்ளது. ஆனால், குறைவான அளவே அரிசி விற்பனையாகி உள்ளது’’ என்றார்.

The post விலையை கட்டுப்படுத்த 50 லட்சம் டன் கோதுமை 25 லட்சம் டன் அரிசி விற்பனை: ஒன்றிய அரசு அறிவிபபு appeared first on Dinakaran.

Tags : Union Govt. New ,Delhi ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!