×

பாக். நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிபர் ஆல்விக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஆகஸ்ட் 12ம்(நாளை மறுதினம்) நிறைவடைய உள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலை நடத்த ஏதுவாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க முடிவு செய்துள்ளார். இதற்கான பரிந்துரை கடிதத்தை அதிபர் ஆரிப் ஆல்விக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுப்பி உள்ளார்.

The post பாக். நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Pak ,Parliament ,Islamabad ,Shahbaz Sharif ,President Alvi ,Parliament of Pakistan ,Pakistan ,Dinakaran ,
× RELATED அதிக வரிவிதிப்பால் 2019 முதல்...