×

இனி கேரளா அல்ல கேரளம்: மாநில பெயரை மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!!

திருவனந்தபுரம்: கேரளா என்ற பெயரை கேரளம் என்று மாற்றம் செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளாவை பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி செய்து வருகின்றனர். கேரள மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்தில் கேரளா என்றே குறிப்பிடப்படுகிறது. மாநிலத்தின் பெயரான கேரளா என்பதை ‛கேரளம்’ என பெயர் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரசியல்சாசனம் மற்றும் அரசு ஆவணங்களில் மாநிலத்தின் பெயர் ‛கேரளம்’ என மாற்றம் செய்ய மாநில அரசு விரும்பியது.

இதற்காக கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தை தாக்கல் செய்த முதல்வர், மலையாளத்தில் ‘கேரளம்’ என்று அழைக்கப்படும் மாநிலம், பிற மொழிகளில் கேரளாவாகவே உள்ளது என்றார். இந்த தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான UDF எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டன. இந்த தீர்மானத்தில் எந்த திருத்தங்களையும் மாற்றங்களையும் பரிந்துரை செய்யவில்லை.

இதையடுத்து சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் கைக்கூப்பியதன் அடிப்படையில் கேரள பெயர் மாற்ற தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கேரளாவின் பெயரை மாற்றம் செய்வதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நேற்று கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post இனி கேரளா அல்ல கேரளம்: மாநில பெயரை மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Keralava ,Pinarayi Vijayan ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...