×

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்

*கலெக்டர் தலைமையில் நடந்தது

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்ட முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

அதில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்ட முன்னேற்பாடு பணிகளை துறைச்சார்ந்த அலுவலர்களை மேற்கொள்ளுமாறு கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். அதில் காவல் துறை அணிவகுப்பு ஏற்பாடுகள் செய்திட ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி ஆகியோர்களுக்கும், கொடிகம்பம் மற்றும் புதிய கொடி, அதற்கான கயிறு ஆகியவற்றை ஏற்பாடு செய்திட வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், முக்கிய பிரமுகர் இருக்கை, மேடை அமைத்தல், பந்தல், தரைக்கம்பள விரிப்பு, ஒளி, ஒலி அமைப்பு ஏற்பாடு செய்திட பொதுப்பணித் துறைக்கும், வளாகத்தை தூய்மைப்படுத்துதல், குடிநீர் ஏற்பாடு செய்தல் மற்றும் இதர பணிகளை ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் செய்திட் உத்தரவிட்டார்.

மேலும், நிகிழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதை கண்காணித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திட வாலாஜா வட்டாட்சியருக்கும், கொடிக்கம்பம் மற்றும் விழா மேடை அருகே வண்ணக்கோலம் இடுதல் பணிகளை மகளிர் திட்ட அலுவலர் மேற்கொள்ளவும், தியாகிகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று நினைவு பரிசு மற்றும் சால்வை வழங்க ஏற்பாடு செய்திட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியருக்கும், காலை உணவு மற்றும் விழா மேடையில் தேநீர், குடிநீர் பாட்டில்கள் வழங்குதல் வழங்கிட ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை ஆகியோர் இணைந்து மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, கலை நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கான நினைவு பரிசு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்திட தொழிற்சாலைஇணை இயக்குனருக்கும், விழா வளாகம் மற்றும் மேடையில் பூந்தொட்டி அமைத்தல், பிரதான வாயிலில் அலங்கார வளைவு அமைத்தல் போன்ற பணிகளை தோட்டக்கலைத்துறை மூலம் மேற்கொள்ளவும், வெப்பநிலை பரிசோதித்தல், கிருமி நாசினி தெளித்தல், விழாவிற்கு வருகை புரியும் நபர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஏற்பாடு செய்திட சுகாதார பணிகள்உதவி இயக்குனர்க்கும், பள்ளி மைதானம் மற்றும் வகுப்பறைகளை பயன்படுத்த ஒத்துழைப்பு வழங்கிட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர்களுக்கும், சுதந்திர தின கொண்டாட்ட ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்திட ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதல், பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்திட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கு குளிர்பானம் வழங்கிட பொது மேலாளர் ஆவின் பால், வேலூர் அலுவலர்களுக்கும், விழா நடத்தும் இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மொபைல் குழு தயார் நிலையில் வைத்திட சுகாதார இணை இயக்குனருக்கும், விழா நடக்கும் இடத்தில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைத்திட மாவட்ட தீயணைப்பு அலுவலர்க்கும் செய்திட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். இதில், வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலால் உதவி ஆணையாளர் வரதராஜ் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Ranipet Collector ,Ranipetta ,Independence Day Festival ,Queen's Collector ,Dinakaran ,
× RELATED வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை...