×

காஞ்சிபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 13,19,111 வாக்காளர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2022-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேற்று (நவ.1, திங்கள்கிழமை) 01.11.2021 வெளியிடப்பட்டது. இவ்வரைவு வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்  ஆர்த்தி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,19,111 இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,42,561 பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,76,381 இதர வாக்காளர்கள் எண்ணிக்;கை 169. மேலும் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக அவற்றில் மற்றொரு புதியதாக வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் 10 வாக்குச்சாவடி மையங்களும்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 1 வாக்குச்சாவடி மையமும், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 1 வாக்குச்சாவடி மையமும் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1393 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் (01.11.2021)ன்படி விவரம் பின்வருமாறு.வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் மனுக்கள் தொடர்பான சிறப்பு முகாம் வருகின்ற 13.11.2021 (சனிக்கிழமை), 14.11.2021 (ஞாயிற்றுக் கிழமை), 27.11.2021 (சனிக்கிழமை) மற்றும் 28.11.2021 (ஞாயிற்றுக் கிழமை) தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்….

The post காஞ்சிபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்தம் 13,19,111 வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,District ,Kanchipuram district ,Kanchipuram… ,Dinakaran ,
× RELATED கோடை வெப்பத்தில் இருந்து வாகன...