×

7.5 லட்சம் பேருக்கு ஒரேயொரு தொடர்பு எண்!: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடந்தது சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம்..!!

டெல்லி: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடந்தது சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளில் 7.5 லட்சம் பேருக்கு ஒரேயொரு தொடர்பு எண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 7,49,820 பயனாளிகள் 9999999999 என்ற ஒரே தொடர்பு எண்ணை கொடுத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. 7.5 லட்சம் பயனாளிகளால் கொடுக்கப்பட்ட ஒரேயொரு தொடர்பு எண்ணும் போலியானதாகும். 1,39,300 பயனாளிகள் 8888888888 என்ற ஒரே தொடர்பு எண்ணை கொடுத்துள்ளனர்.

9000000000 என்ற ஒரேயொரு எண்ணை தொடர்பு எண்ணாக 96,046 பேர் கொடுத்து மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். தொடர்பு எண் எதுவும் கொடுக்காமல் 9 லட்சம் பேர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் ஓய்வூதியதாரர்களும் திட்டத்தில் சேர்ந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 7.87 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்யா திட்டத்தை பிரதமர் மோடி 2018-ல் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 7.5 லட்சம் பேருக்கு ஒரேயொரு தொடர்பு எண்!: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடந்தது சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,C. PA GG ,PM ,PA ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில்...