×

ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு; 1 கிலோ ரூ.70க்கு விற்பனை

 

ஈரோடு, ஆக. 9: ஈரோடு வ.உ.சி. மைதானம் அருகே செயல்படும் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஓட்டன்சத்திரம், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரத்தாகும். கடந்த 2 மாதமாக போதிய தக்காளி வரத்து இல்லாததால் ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், ஏழை, எளிய மக்களும், ஓட்டல் கடை உரிமையாளர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

கடந்த சில தினங்களாக தக்காளி வரத்து அதிகரிக்க துவங்கியதால், தக்காளி விலை படிப்படியாக குறைய துவங்கி 1 கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. இந்நிலையில், ஈரோடு மார்க்கெட்டிற்கு நேற்று ஆந்திரா, கிருஷ்ணகிரி, தாராபுரம், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து தக்காளி வரத்தானதால், நேற்று தக்காளி விலை மேலும் குறைந்து, ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் வரக்குடிய நாட்களில் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு; 1 கிலோ ரூ.70க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode V.U.C. ,Thalavadi ,Tarapuram ,Tirupur ,Maidan ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது