×

3வது டி20 போட்டி வெஸ்ட் இண்டீஸ் 159 ரன் குவிப்பு

கயானா: இந்திய அணியுடனான 3வது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்தது. அந்த அணியில், காயம் காரணமாக ஹோல்டருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஸ்டன் சேஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் இஷான், பிஷ்னோய்க்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (அறிமுகம்), குல்தீப் இடம் பெற்றனர்.

பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 55 ரன் சேர்த்தது. மேயர்ஸ் 25 ரன் எடுத்து அக்சர் சுழலில் அர்ஷ்தீப் வசம் பிடிபட்டார். ஜான்சன் சார்லஸ் 12, நிகோலஸ் பூரன் 20, பிராண்டன் கிங் 42 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து குல்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிரடி வீரர் ஹெட்மயர் 9 ரன் எடுத்து முகேஷ் குமார் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. கேப்டன் ரோவ்மன் பாவெல் 40 ரன் (19 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ரொமாரியோ ஷெப்பர்ட் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் குல்தீப் 3, அக்சர், முகேஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

The post 3வது டி20 போட்டி வெஸ்ட் இண்டீஸ் 159 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : 3rd T20 ,West Indies ,Guyana ,T20 ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...