×

தக்காளி திருட்டை தடுக்க சிசிடிவி கேமரா

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் அவுரங்காபத்தை சேர்ந்தவர் சரத் ராவ்டே. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் சுமார் ஒன்றரை ஏக்கரில் தக்காளியை பயிரிட்டுள்ளார். தற்போது தக்காளியின் விலை கிலோ ரூ.100 முதல் 200 வரை விற்பனையாகின்றது. தக்காளியின் தேவை அதிகரித்துள்ளதால் தக்காளியை திருடி செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றது.

மேலும் சரத்துக்கு சொந்தமான கங்காபூர் தாலுக்காவில் இருந்து சுமார் 25கிலோ தக்காளியை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் தக்காளி திருட்டை தடுக்கும் வகையில் தனது விளை நிலத்துக்கு சரத், சுமார் 22ஆயிரம் ரூபாய் செலவு செய்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றார். சிசிடிவி கேமரா சூரிய ஒளியில் இயங்கி வருவதால் மின்விநியோகம் குறித்து கவலையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தக்காளி திருட்டை தடுக்க சிசிடிவி கேமரா appeared first on Dinakaran.

Tags : Aurangabad ,Sarath Rawde ,Aurangabad, Maharashtra ,Dinakaran ,
× RELATED பிபிசி தலைவராக இந்தியர் நியமனம்