×

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் நியமனம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான இன்சமாம்-உல்-ஹக் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பை மற்றும் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இன்சமாம்-உல்-ஹக் தலைமைத் தேர்வாளராக கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் வீரரான இன்சமாம்-உல்-ஹக், 120 டெஸ்ட், 378 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 20,541 ரன்களைக் குவித்துள்ள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி, இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அப்போது இன்சமாம்-உல்-ஹக் தான் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைத் தேர்வாளராக நியமித்தது குறித்து இன்சமாம்-உல்-ஹக் கூறியுள்ளதாவது; “பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டது பெருமையாக உள்ளது, நான் முன்பே தலைமைத் தேர்வாளராக இருந்துள்ளேன், தற்போது மீண்டும் அதில் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். கடந்த முறை செய்ததை விட சிறப்பாகச் செய்ய முயற்சிப்பேன்” என அவர் கூறியுள்ளார்.

The post பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராக முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Inzamam-ul-Haq ,selector ,Pakistan cricket team ,Islamabad ,Pakistan ,Pakistan cricket ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்கள்