×

சித்தூரில் கடன் தவணைகளை கட்டாமல் ₹10 லட்சம் மோசடி செய்த சங்க மித்ரா ஊழியர்

*கைது செய்யக்கோரி மகளிர் குழு ஆர்ப்பாட்டம்

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ₹10 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த சங்க மித்ரா ஊழியரை உடனடியாக கைது செய்து, பணத்தை மீட்டு தரக்கோரி மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ₹10 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த சங்க மித்ரா ஊழியரை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:

சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் மண்டலம், தும்ம குப்பம் கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இக்குழுவிற்கு வங்கிகள் மூலம் கடன் பெற்றுத்தரவும், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க அரசு சங்கமித்ரா திட்டத்தின் கீழ், ஜாம்பவி என்கிற பெண்ணை நியமித்துள்ளது.இவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் பெற்று தரவும், மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் செலுத்தும் மாத தவணையை வசூல் செய்து வங்கியில் செலுத்தி வந்தார். இந்நிலையில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் கடன் தொகை கட்டி முடித்துவிட்டு புதிய கடன் கேட்டபோது நீங்கள் இன்னும் ஆறு மாதம் தவணை கட்ட வேண்டும் என தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் வங்கி கணக்கை சரி பார்த்தோம். அதில் நாங்கள் கட்டிய தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை, அதில் நாங்கள் செலுத்திய தவணை தொகை ₹10 லட்சத்திற்கு மேல் வங்கியில் கட்டாமல் மோசடி செய்துள்ளார். பின்னர் இது குறித்து நாங்கள் அவரிடம் கேட்போது சரியான பதில் அளிக்காமல் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் எங்களை தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார்.

இது குறித்து மாவட்ட மகளிர் சுய உதவி குழு அதிகாரி புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ₹10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த சங்கமித்ரா ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். அதேபோல் நங்கள் செலுத்தி தவணை தொகையை உடனடியாக மீட்டு தர வேண்டும். இல்லையென்றால் நாங்கள் குடும்பத்தோடு கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மகளிர் சுய உதவி குழு பெண்கள் தெரிவித்தனர்.

The post சித்தூரில் கடன் தவணைகளை கட்டாமல் ₹10 லட்சம் மோசடி செய்த சங்க மித்ரா ஊழியர் appeared first on Dinakaran.

Tags : Sangha Mitra ,Chittoor ,Sangh Mitra ,Dinakaran ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...