×

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிட்டு ஆக.15-ல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க 2020-ம் ஆண்டு ரூ.710 கோடி செலவில் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் கான்கிரீட் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொண்டால் 33 கசிவு நீர் திட்டங்களும், நிலத்தடி நீர் ஆதாரங்களும் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே கீழ்பவானி கால்வாயில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாழை, கரும்பு, மஞ்சள் பயிர்களை கைகளில் ஏந்தி அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கால்வாய் சீரமைப்பு திட்டத்திற்கான அரசாணை எண் 276-ஐ ரத்து செய்யவும், பழைய கட்டுமானங்களை மட்டும் சீரமைத்து விட்டு மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும், ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். பவானி சாகர் அணையில் இருந்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கீழ்பவானி கால்வாய் செல்கிறது. இதன் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

The post கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிட்டு ஆக.15-ல் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,Farmers Association ,Erode ,Kilibhavani ,Kilibhavani canal ,Dinakaran ,
× RELATED அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி அய்யாக்கண்ணு போராட்டம்