×

மீன்வள பல்கலையில் 14 பதக்கங்களுடன் பட்டம் பெற்ற மீனவரின் மகள்!

138 இளநிலை (மீன்வள அறிவியல்), 33 பி.டெக். (மீன்வளப் பொறியியல்), 33 பி.டெக். (உயிரி தொழில்நுட்பம்), 37 பி.டெக். (உணவு தொழில்நுட்பம்), 21 B.Voc. (உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பம்), 15 B.Voc. (மீன் வளர்ப்பு), 9 B.Voc. (மீன்பிடி தொழில்நுட்பம்), 8 B.Voc. (நீர்வாழ் உயிரின நல மேலாண்மை), 32 M.F.Sc. (மீன்வள அறிவியல்), 4 எம்பிஏ (மீன்வள தொழில் மேலாண்மை) மற்றும் 19 முனைவர் பட்டங்கள் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டன.மேலும், 34 மாணவ-மாணவியர் தங்களது பட்டங்களை தபால் மூலம் பெற உள்ளனர். மாணவர்களுக்கு கல்வித் திறன் மற்றும் செயல்திறனுக்கான பதக்கங்களை ஆளுநர் வழங்கினார். ஜெ.ஐஸ்வர்யா, பி.எப்.எஸ்சியில் 14 பதக்கங்களை பெற்றார். எம்.எஃப்.எஸ்.சி.யில் ஏ. கமலி 6 பதக்கங்களையும், பிஎச்.டி.யில் கே. அபர்ணா முனைவர் பட்ட படிப்பிற்கான பதக்கத்தை பெற்றார். பி.டெக் (மீன்வள பொறியியல்) பிரிவில் பி.யாழினியன், பி.டெக் (உயிரி தொழில்நுட்பவியல்) பிரிவில் எஸ்.அட்சயா, B.Voc. (மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம்) பிரிவில் எஸ்.நவீனா ஆகியோர் பல்கலைக்கழக முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றனர்.இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா 14 தங்கப்பதங்கங்களுடன் பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். பேச்சுலர் ஆப் ஃபிஷ்ஷரிஸ் சயின்ஸ் பாடத்தில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக தேர்வாகியுள்ளார்.

அனைத்து பாடங்களிலும் முதல் மாணவியாக தேர்வானதால் 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது, ‘‘குவாலிட்டி அஷ்யூரன்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், ஃபிஷ்ஷர்மென் வெல்ஃபேர்போட் ஆகிய பாடங்களில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக தேர்வாகியுள்ளேன். நான் மீனவ குடும்பத்தை சேர்ந்தவள்தான். என்னுடைய படிப்புக்கு உதவியது தமிழ்நாடு மீனவர்நல வாரியம்தான். மேலும் நான் இத்தனை பதக்கங்கள் வாங்க காரணம் எனது ஆசிரியர்கள் நடத்திய பாடங்களை உள்வாங்கி படித்ததால்தான் இது முடிந்தது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளை மீனவர்களுக்கு செய்து தரவேண்டும். புதிய புதிய திட்டங்களை மீனவர்களுக்கு செய்து தர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. தற்போது மும்பையில் உள்ள மீன்வள கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் படித்து வருகிறேன். அதன் பிறகு பிஎச்டி படிக்க உள்ளேன். ’‘ என்றார். தன் மகளின் சாதனை குறித்து ஐஸ்வர்யாவின் தந்தை ஜெயபால் நெகிழ்ச்சியுடன் கூறும்போது, ‘‘என் மகள் மீனவர்களுக்கான உதவித்தொகை மூலம்தான் படித்தாள். அவளுடைய முழு ஈடுபாட்டால்தான் இன்று இந்த சாதனையை படைத்துள்ளார். பெற்றோருக்கான கடமை என்னவோ அதைதான் நாங்கள் செய்தோம். இதைப் பார்த்து மீனவர்களின் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.’’ என்றார்.

 

The post மீன்வள பல்கலையில் 14 பதக்கங்களுடன் பட்டம் பெற்ற மீனவரின் மகள்! appeared first on Dinakaran.

Tags : University of Fisheries ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை!!