×
Saravana Stores

டெல்லி மாநகராட்சியை தரம் குறைக்கும் மசோதா நிறைவேறிய நாள்; மக்களாட்சியின் கறுப்பு நாள்: முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி மசோதா நிறைவேறிய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்து சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள் என்றும் மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல் , டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. நான் யாருக்கும் அடிமையில்லை என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, “கொத்தடிமையாக” தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post டெல்லி மாநகராட்சியை தரம் குறைக்கும் மசோதா நிறைவேறிய நாள்; மக்களாட்சியின் கறுப்பு நாள்: முதல்வர் ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Delhi Corporation ,Stalin ,Chennai ,Delhi ,Principal ,
× RELATED தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்