×

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் என்ற சாதனையை படைத்தது SBI

டெல்லி: 11 ஆண்டுகளுக்கு பிறகு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் என்ற சாதனையை பாரத ஸ்டேட் வங்கி (SBI) படைத்தது.நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் ஏப்ரல்-ஜூன் SBI-ன் நிகர லாபம் ரூ.18,537 கோடி ஆகும். ரிலையன்ஸ் ரூ.16,011 கோடி ஆகும். இதற்கு முன்பாக 2011-2012 நிதியாண்டில் ரிலையன்ஸை பின்னுக்கு தள்ளி SBI முதலிடம் பிடித்தது.

நாட்டில் உள்ள அனைத்து 12 பொதுத்துறை வங்கிகளும் நடப்பு நிதியாண்டின் (2023-24) ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் ரூ.34,774 கோடி லாபம் ஈட்டியுள்ளன. 2022-23ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ரூ.15,306 கோடியை விட இரண்டு மடங்கு வளர்ச்சி அதிகமாகும். முந்தைய காலாண்டுகளில் தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மீள் வருகையை கடைசி காலாண்டிலும் கண்டது. பஞ்சாப் நேஷனல் வங்கி 307 சதவீதம் லாப வளர்ச்சியுடன் முன்னணியில் உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாபம் ரூ.308 கோடியிலிருந்து ரூ.1,255 கோடியாக உயர்ந்துள்ளது. எஸ்பிஐ 178 சதவீத வளர்ச்சியுடன் ரூ.16,884 கோடி லாபத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த காலாண்டில் எஸ்பிஐ அதிக லாபத்தையும் பதிவு செய்துள்ளது. மேலும், பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபத்தில் பாதிக்கும் மேல் SBA வசம் உள்ளது.

பாங்க் ஆப் இந்தியா 176 சதவீத வளர்ச்சியுடன் ரூ.1,551 கோடி லாபத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூகோ வங்கி ஆகியவை 80 முதல் 95 சதவீதம் லாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஒரே ஒரு வங்கி மட்டுமே லாப இழப்பை பதிவு செய்தது; பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி. வங்கியின் லாபம் ரூ.153 கோடி. இது 2022-23ம் ஆண்டின் இதே காலாண்டை விட 25 சதவீதம் குறைவு.

இந்த லாபம் அதிக வட்டி விகிதங்களால் உந்தப்பட்டு அதன் மூலம் அதிக நிகர வட்டி வரம்பு (NIM) பதிவு செய்யப்பட்டது. வங்கிகளால் பதிவு செய்யப்பட்ட என்ஐஎம் மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா அதிக நிகர வட்டி லாப வரம்பைப் பதிவு செய்தது (3.86%). சென்ட்ரல் வங்கி 3.62 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இந்தியன் வங்கி 3.61 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

The post இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அதிக லாபம் ஈட்டிய நிறுவனம் என்ற சாதனையை படைத்தது SBI appeared first on Dinakaran.

Tags : SBI ,India ,Delhi ,Mukesh Ambani ,Reliance Group ,Dinakaran ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...