×

தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

 

தேனி ஆக. 8: தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தின்போது, முதியோர் உதவித் தொகை கேட்டு 32 மனுக்களும், புதிய வீட்டுமனைப்பட்டா கேட்டு 68 மனுக்களும், வேலைவாய்ப்பு கேட்டு 5 மனுக்களும், 122 இதர மனுக்களுமாக மொத்தம் 227 மனுக்களை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் அளித்தனர். இம்மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய தீர்வுகளை மனுதாரர்களுக்கு அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக , உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித் தொகையாக 10 பேருக்கு ரூ. 2 லட்சத்து 22 ஆயிரத்து 500 தொகையினை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

The post தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Theni ,Collector ,Shajivana ,Theni District Collector ,Dinakaran ,
× RELATED சமூகநலத்துறை பணியிடங்களுக்கு...