திருப்புத்தூர், ஆக.8: திருப்புத்தூர் அருகே கருப்பூர் பகுதியில் கார், அரசு பஸ் மீது மோதி விட்டு பள்ளி வேன் மீது மோதியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். திருப்புத்தூரில் இருந்து அரசு பஸ் நேற்று மாலை மதுரை ரோடு வழியாக குமுளி சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி எதிரே கார் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிரே வந்த அரசு பஸ் மீது கார் இடித்து, கருப்பூர் பகுதியில் நின்று கொண்டிருந்த காரைக்குடி தனியார் பள்ளி வாகனத்தில் மோதியது.இந்த விபத்தில் பள்ளி வாகன ஓட்டுநர் பூபாலன்(44), காரில் வந்த புதுக்கோட்டை அய்யனார்புரம் அருமைநாதன் (62), ஜெனிதா(55), குமாரி (60), சகாயராஜ்(50), அமலி (40) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருப்புத்தூர் அருகே விபத்தில் 6 பேர் படுகாயம் appeared first on Dinakaran.
