×

தாய்,தந்தை நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய தொழிலதிபர்

இளையான்குடி, ஆக.8: இளையான்குடி அருகே பகைவரைவென்றானைச் சேர்ந்தவர் தனசேகரன்(58). இவரது மனைவி ஜெயசித்ரா, மகன் கோடீஸ்வரன் ஆகியோருடன் மலேசியாவில் குடியுரிமை பெற்று தொழிலதிபராக உள்ளார். மலேசியாவில் கோலாலம்பூர், பினாங்கு, இபோ ஆகிய இடங்களில் சென்னை சில்க்ஸ் என்ற பெயரில் ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், இளையான்குடியில் விகேடி டவர்ஸ் வணிக வளாகத்தில் தந்தை வெள்ளைக்கூத்தன், தாய் நாகலெட்சுமி ஆகியோரின் சிலையை திறந்து வைத்தார். தனது தாத்தா முத்தையா சேர்வை, பாட்டி பொன்னம்மாள் ஆகியோருக்கு தனது சொந்த ஊரான பகைவரைவென்றானில் கோசாலையில் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து மூன்று சக்கர வண்டி, கைத்தடி, செயற்கை ரப்பர் கால் வழங்கப்பட்டது. பெற்றோரை இழந்த பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தலா ரூ.ஆயிரம், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, சென்னை சாந்தி என்டர்பிரைசஸ் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டு மனை பத்திரம் வழங்கினார்.  மேலும் சாலை வசதி, கோசாலை அமைத்து கிராம மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். தொழிலதிபர் தனசேகரன், ஜெயசித்ரா தம்பதியினரையும், அவர்களது மகன் கோடீஸ்வரனையும் அப்பகுதி மக்கள் வாழ்த்தி பாராட்டினர்.

The post தாய்,தந்தை நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய தொழிலதிபர் appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Dhanasekaran ,Pakaivarivenran ,Malaysia ,Jayasitra ,Kodeeswaran ,
× RELATED சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்