×

இளம்பெண் பலாத்காரம் வாலிபருக்கு குண்டாஸ்

அரியலூர், ஆக.8: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர், முருகேசன் மகன் அன்பரசு(21). இவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் அன்பரசுவை கைது செய்து ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் அன்பரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் இவர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லாவிடம் பரிந்துரைக்கப்பட்டது. இதனை ஏற்ற மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அன்பரசுவை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தவிட்டார். இதையடுத்து அன்பரசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, அதற்கான ஆணைப் பிரதிகள் சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

The post இளம்பெண் பலாத்காரம் வாலிபருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Anbarasu ,Amandakarai Vinayakar Koil Street, Thiruvidaimarudur Circle, Thanjavur District ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் ரூ.50ஆயிரம் திருட்டு