×

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

நாகப்பட்டினம்,ஆக.8:தமிழ்நாடு அரசால் கொண்டாடப்படும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருமருகல் ஒன்றியம் திருப்புகளூர் ஊராட்சியில் வரும் 10ம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. கால்நடைகளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், கன்றுகளுக்கு கன்று வீச்சு தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி போடுதல், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு பயிற்சி, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஆலோசனைகள் ஆகியவை நடைபெறுகிறது. கால்நடை வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : health ,Nagapattinam ,Tamil Nadu government ,Thirumarukal Union ,Tirupukalur Panchayat ,Animal Husbandry Department ,Animal Health Awareness Camp ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐ-ல் மாணவர்கள் சேர்க்கை