×

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா

வடமதுரை, ஆக. 8: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் இரவு பெருமாள் சிம்மம், சேஷம், கருடன்ல, யானை, குதிரை போன்ற வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களுடன் வீதி உலா வந்தார் அப்போது பல்வேறு மண்டக படிதாரர்களின் உபயத்தில் கலைநிகழ்ச்சிகள், வான வேடிக்கைகளுடன், புளியோதரை, பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த ஆக.1ம் தேதி தேரோட்டம் நடந்தது இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். அதன்பின் பெருமாள் முத்து பல்லக்கில் வீதி உலா வந்தார். ஆடி திருவிழாவின் கடைசி நாளில் சவுந்தரராஜ பெருமாள் விடையாத்தி குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் வீதி உலா வந்தார் அப்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இத்துடன் ஆடி திருவிழா நிறைவு பெற்றது.

The post வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Soundararaja ,Perumal Street ,North Madurai ,Vadamadurai Soundararaja Perumal Temple Adi Festival ,Vadamadurai Soundararaja Perumal Horse Ride ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...