×

பெரியாரை அவதூறாக பேசியவர் மீது வழக்கு: நவிமும்பை போலீசார் நடவடிக்கை

நவிமும்பை: ஷிவ் பிரதிஷ்தான் இந்துஸ்தான் என்ற அமைப்பை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருபவர் சம்பாஜி பிடே. இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவுரங்காபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிடே,புத்தர் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், மற்றும் ஜோதிபா புலே ஆகியோரை அவதூறாக பேசியிருந்தார்.

இதன் அடிப்படையில் பிடே மீது நவிமும்பையில் உள்ள நியூ பன்வெல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் பிடே இதுவரை கைது செய்யப்படவில்லை. பிடேயை பாரதிய ஜனதா ஆதரிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

The post பெரியாரை அவதூறாக பேசியவர் மீது வழக்கு: நவிமும்பை போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyar ,Navi Mumbai ,Sambhaji Pide ,Shiv Pratishtan Hindustan ,Dinakaran ,
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தி.வி.க. கண்டனம்..!!