×

வங்கியில் கடன் வாங்கி குஜராத் நிறுவனம் ரூ.46.79 கோடி மோசடி: இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு

அகமதாபாத்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.46.79 கோடி மோசடி செய்ததாக குஜராத் தனியார் நிறுவனம், அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வாக்கு பதிவு செய்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘கிரீன்டியம்ஸ் பயோடெக் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.46.79 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அதன் இயக்குநர்கள் சம்பத் சங்கவி, தீபக் சம்பத் சங்கவி மற்றும் அஷ்வின் ஷா மற்றும் பலர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அகமதாபாத்தில் உள்ள நிறுவனம் மற்றும் பல்வேறு இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் கிரீன்டியம்ஸ் பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மீதும்,அதன் இயக்குனர்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post வங்கியில் கடன் வாங்கி குஜராத் நிறுவனம் ரூ.46.79 கோடி மோசடி: இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,CBI ,Ahmedabad ,Union Bank of India ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...