×

பஞ்சாபியர் குழம்பு

தேவையானவை:

தனியா – 3 ஸ்பூன்,
கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்,
மிளகு – 1 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
சிறிய வெங்காயம் – 15,
தக்காளி – 2,
பட்டாணி – 100 கிராம்,
உருளைக் கிழங்கு – 100 கிராம்,
காலிஃபிளவர் – 100 கிராம்,
சீரகம் – 1 ஸ்பூன்,
எண்ணெய் – 3 ஸ்பூன்,
உப்பு, மஞ்சள் – தேவைக்கு.

செய்முறை:

காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் எண்ணெயில் மல்லி விதை, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் முதலியவற்றை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களை ஆறு சின்ன வெங்காயங்களுடன் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மீதி எண்ணெயை ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வெடித்ததும் வெட்டி வைத்திருக்கும் சின்ன வெங்காயங்களை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலாவையும் உடன் சேர்க்கவேண்டும். பிறகு தண்ணீர் கலந்து காய்களையும் மஞ்சள், உப்பையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறக்குவதற்கு முன் தக்காளிப் பழங்களை வெட்டிப் போடவேண்டும். அவை வெந்ததும், இறக்கிவிட வேண்டும்.

The post பஞ்சாபியர் குழம்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு